அந்தர் ஆத்மா தச்சனா தேவனா என்றார் நகுலன் நாம் என்றேன். பூஜ்யத்திற்கு முன்னேறுகிறவன் மறுபடியும் பூஜ்யம் அதிலிருந்து சறுக்கி வேறொ-ன்றிற்கு வருகிறேன் பிறகு மீண்டும் பூஜ்யத்திற்கு முன்னேறுகிறேன். ஆமென் முன் பின் மாற்றிப் பேசுவது மனிதர்க்கு இயல்புதான் என்பதை ஒத்துக்கொள்வதில் தொடங்குகிறது தோல்வியின் சமரசம். ஒற்றை உபாயம் கடந்து வந்த காலத்திலிருந்து ஒரே ஒரு மாற்றத்தை மேற்கொள்ள மட்டும் காலம் அனுமதிக்கிறது அது மறத்தல். நிர்கதிக்கு ஒரு கணம் முன் ஆகக் கடைசியான வார்த்தையையும் பிரயோகித்தாயிற்று என்ன…