“இன்னும் மக்கள்” என்ற தலைப்பில் 1-5-1991-இல் புஷ்கின் இலக்கியப் பேரவை வெளியீடாக வந்த ஹைக்கூ கவிதைகளின் கூட்டுத்தொகுப்பினைத் தொகுத்தவர்கள் த.சலாவுத்தீன், பழநிபாரதி, எம்.எஸ் தியாகராஜன் ஆகியோர். மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் என்று மூன்று பிரிவுகளில் நடந்த ஹைக்கூ போட்டிகளுக்கு வந்த கவிதைகளின் தொகுப்பு. பரிசளித்த விவரங்களையும் இணைத்திருக்கிறார்கள். ஹைக்கூவைப் பொறுத்த வரையில் ஆய்வு நோக்கில் அதன் பரிணாம நிலைகளைப் பார்க்கையில் முன் வெளிவந்த அல்லது எழுதப்பட்ட ஹைக்கூக்களை உட்படுத்துவது அவசியமாகிறது. தொடக்ககால நூலான “இன்னும் மக்கள்” என்னும்…
Month: May 2023
விக்கிரவாண்டி உணவு விடுதிகள்
தமிழ்நாட்டில் நீண்டதூரப் பேருந்துப் பயணங்களில் விக்கிரவாண்டிப் பகுதி உணவு விடுதிகள் இன்றியமையதவை. முன் எப்போதும் இல்லாத வகையில் பல மாற்றங்கள் இப்போது காணக்கிடைக்கின்றன. அதிக ஒலியும் வீண் பரபரப்புகளும் உயர்ந்த விலைப்பட்டியலும் இப்போது இல்லை. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக என்று சொல்லப்படுகின்றது. அந்த வகையில் மிக்க மகிழ்ச்சி. ஆயினும் தரமான உணவில் தான் பிரச்சனை. பயணங்களுக்கு உகந்த இட்டிலிகள் இல்லையென்றே எப்போதும் சொல்கிறார்கள். தோசை மற்றும் பரோட்டாக்கள் கிடைக்கின்றன என்றாலும் தீனிவகைகளில் தான் ஏமாற்றம். ஊருக்குள்…
நெகிழ்ச்சியின் கண்ணீர்த்துளி
நிகழ்காலத்தின் இயல்புகளைக் கொண்டு வாழ்வின் பெருமதியை நினைவில் கிளர்த்தும் ஒரு திரைப்படம் குட் நைட். எட்டுப் பத்து இடங்களில் நெகிழ்ச்சியோடு கைதட்டி வாய்விட்டு வெடித்துச் சிரித்து இப்படி ஒரு திரைப்படம் பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. குவாட்டர்ஸ் எனப்படும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியலை அச்சு பிசகாமல் காட்சிப்படுத்தியதும், “இந்தாங்க ட்ரெஸ்ஸுக்கு மேட்சா தேன் மிட்டாய்” என்பது போலக் குட்டிக்குட்டிப் பரவசங்கள் நிறைந்திருப்பதாகவும் ஆச்சர்யப்படுத்துகிறது. கேரளாவையும் வங்கத்தையும் சான்று காட்டிப் பேசுவதுபோல இனி மென் உணர்வு உறவுச் சிக்கல்கள்…
ஒளியிடமிருந்து ஒரு செம்புலம்பல் பக்கம்
‘தடாகத்தில் பூத்திருந்த தாமரையைப் பறிக்க நீந்தினேன் எனது கையின் ஒவ்வொரு அசைவிற்கும் அது விலகிக்கொண்டே சென்றது என்னால் அதைப் பறிக்கவே முடியவில்லை.’ – இரவீந்திரநாத் தாகூர் நேற்றைய காலையிலிருந்து பகலில் பல முறை முயன்றும் கேட்கமுடியாமல் இருந்தது. இணையம், சூழல் முதலானவைகளால். இப்போது கேட்டேன். நன் முயற்சி. கொஞ்சம் புலம்புவோம் என்று ஸ்பாடிஃபை பக்கம் தொடங்கியிருக்கும் ஒளி முருகவேல் அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும். ஆறாம் பகுதி எழுத்தாளர் ஷாலினி பிரியதர்ஷினியுடனான சிறப்பான பகிர்வு. தாகூரைப் பற்றிய இயல்பான…