ஜப்பானிய ஹைக்கூ தமிழில் : கவின் ● ஒரு மெழுகுவர்த்தியின் ஒளி இன்னொரு மெழுகுவர்த்திக்கு மாற்றப்படுகிறது வசந்தகால மாலை – அழகான கிண்ணத்தில் இந்த மலர்களை அடுக்கி வைப்போம் அரிசி இல்லை என்பதால் – குதிரைகளில் பதினோரு ஆண்கள் நிதானமாக முன்னேறுகின்றனர் காற்று மற்றும் பனிப்புயலினூடாக – பலத்த சத்தத்துடன் மழை ஆலங்கட்டிகள் விழுகின்றன என் புன்னைமரப் பயணத் தொப்பியின் மீது – குளிர்காலம் துவங்குவதற்கு முன் குழந்தைக்குச் சொல்லித் தருகிறேன் உணவுக்குச்சிகளைக் கையாள – நாம்…
Month: April 2023
சும்மாயிரு சதாசிவம்
சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர் சத்தமும் சத்தமுடிவும் தம்முட் கொண்டோர் நித்தர் நிமலர் நிராமயர் நீள் பர முத்தர் தம் முத்திமுதல் முப்பத்தாறே. (திருமந்திரம்.125) சித்தர்கள் சிவலோகத்தில் பெறவேண்டியதை இப்பூவலகிலேயே தரிசிப்பார்கள். சத்தத்தையும் அதன் முடிவையும் தம்முள்ளேயே கொண்டவர்கள். குண்டலினி சக்தியை அசைத்தெழுப்பும் நாதமே சத்தமாகும். அதன் இறுதி நிலையான அசைவின்மை (சமாதி நிலை) சத்தத்தின் முடிவு. அம்முடிவில் ஒரு துவக்கம் உண்டு. பேரானந்தப் பாதையின் நித்தியத்துவத் துவக்கம் அது. மெய்யனுபங்களில் அறிவினைப் பயன்படுத்தாது “வெறுமனே” “சும்மாயிருத்தல்”…
பாரதியும் தமிழ் ஹைக்கூவும்
மகாகவி பாரதியார் அவர்கள் தமிழில் முதன் முறையாக ஹைக்கூக் கவிதைகளை அறிமுகப்படுத்தி ஒரு கட்டுரை எழுதினார். அக்கட்டுரையே தமிழுக்கு ஹைக்கூக் கவிதைகளைக் கொண்டு வந்தது எனலாம். சுதேசமித்திரன் இதழில் அக்கட்டுரை 16.10.1916 அன்று வெளியானது. ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் சிலவற்றின் மொழிபெயர்ப்புகளைக் கொண்டிருந்த அக்கட்டுரை மகாகவி பாரதியார் அவர்கள் ஹைக்கூக் கவிதைகளைப் பற்றிக் கொண்டிருந்த சிந்தனைகளை எடுத்தியம்பியது. அக்கட்டுரையை வாசித்த எழுத்தாளர்களும், பொது மக்களும் ஹைக்கூக் கவிதைகளின் மீது தங்களின் கவனத்தைத் திருப்பினர். ஒரு புதியவகைக் கவிதை…
அரூப ராத்தடத்தின் நறுமணம்
1. ராத்தடம் முழுக்க உதட்டின் ரேகைகள் அதில் செழுங்கவிதைகளின் இசைக்குறிப்புகள் அரூப வாசனைச் சுவர் முழுவதும் அவளின் உதடுசுழிப்புகள். 2. ரா எனை மீட்டுகிறது ‘என்னடா சும்மா வானத்தப் பார்த்துட்டு உட்கார்ந்திருக்க?’ என்ற கேள்விக்கான விடையை நட்சத்திரத்தைக் கேட்டுச் சொல்ல முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். 3. மேற்கண்ட ரா கவிதையைப் படித்துவிட்டு நீங்கள் நினைத்தது சரிதான் நான் ஒரு பைத்தியம் தான் கொஞ்சம் இதமாய்ச் சொன்னால் பிறழ்வன். 4. எந்த நள்ளிரவிலும் வரக்கூடும் ஒரு டிங் அதற்காகவும் உறங்காமலிருக்கிறேன்…