தனது இறுதிக்காலத்தில் நடுங்கிக்கொண்டே எழுதிய மகத்தான எழுத்தாளர் ஒருவரின் கரம்பிடித்துப் பார்த்தேன் இன்று. எழுத்தை அதிதீவிரமாக நம்பியிருந்தவன் ஒருவனின் ஆன்மாவைத் தரிசிக்க நேர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். காலத்தைப் பின்னோக்கி நகர்த்தி எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் செம்பிரதி “நான் புதுமைப்பித்தன்” நாடகம். எஸ்.ராமகிருஷ்ணன் கதை வசனத்தில் கருணா பிரசாத் இயக்கத்தில் நான் புதுமைப்பித்தன் நாடகம் கூத்துப்பட்டறை முத்துசாமி அரங்கில் நடைபெற்றது. அவரின் அந்த உறுதி வெளிப்பட்ட விதம், இயலாமை இருப்பினும் சமரசங்களுக்கு ஆட்படாமல் தனக்கான…