1996 -லிருந்து மழை பதிப்பகமாகவும் பின்னர் 2010- இல் இருந்து இடையன் இடைச்சி நூலகமாகவும் பதிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. சற்றேறக்குறைய தங்களின் முதல் புத்தகங்களை வெளிக்கொணர முடியாமல் தடுமாறுகிறவர்களுக்காகவும் நண்பர்களின் நூல்களை நாமே கொண்டு வரலாம் என்ற கருத்துக்களின் அடிப்படையிலும் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் மழை என்ற கவிதைச் சிற்றிதழே பதிப்பகத்தின் பெயராகவும் அமைந்தது. பின்னர் இடையன் இடைச்சியின் வாழ்வுமுறை மற்றும் அவர்தம் அன்பியல் பேரூற்றின் நடைமுறை வடிவங்களால் ஈர்க்கப்பட்டு இடையன் இடைச்சி நூலகம் என்ற பெயரில் பதிப்பகம் தொடர்கிறது. இயற்கையிடம் இருந்து கவனித்தல், மனிதர்களிடம் இருந்து கற்றல் ஆகிய ஜென் அடிப்படைகளில் இஃது நிகழ்கிறது.
கவிதை நூல்கள் :
ரோஜர் – ஜனனன் பிரபு
இரவின் கடைசி நிமிடத்தில் சுழல்பவன் – விதுரன் சுரேஷ்
வெயிலில் நனைந்த மழை – மணி சண்முகம்
கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் – சேலம் ராஜா
இடைவெளியில் உடையும் பூ – ஜெயஸ்ரீ
தாழப்பறக்கும் வெயிலோன் சொல்லாத மயில் பற்றிய குறிப்புகள் – சேலம் ராஜா
மஞ்சள் நிலாக்கள் அள்ளி வரும் சிறுமி – கார்த்திக் முருகானந்தம்
ஹைக்கூ நூல்கள் :
பறக்க ஆயத்தமாகும் குருவி – பட்டியூர் செந்தில் குமார்
மொழிபெயர்ப்பு நூல்கள் :
கவிதைகள் :
எனது நூறு கிராமங்களின் பெயர்களை இரவோடு இரவாக மாற்றிவிட்டனர் – ரமேஷ் குமார்
சிறுகதைகள் :
நாலு இருபத்தஞ்சா நூத்தம்பது – ரமேஷ் குமார்
கோமலி – நாணற்காடன்
ரஜியா – ரமேஷ் குமார்
தொகுப்பு நூல் பதிப்பு :
நெய் மணக்கும் நெசவுக் கவிதைகள்
மேலும் சில தகவல்கள் :
நூல்களைப் பெற www.tamilhaiku.com என்ற இணைய விற்பனைத் தளம் இயங்குகிறது.
இடையன் இடைச்சி நூலகத்தின் இலச்சினை: