6 ஹைக்கூ இதழ்
சரக்கொன்றை ஹைக்கூ இதழ்
பாஷோ ஹைக்கூ இதழ்
மழை கவிதை இதழ்
தொடக்க காலத்திலிருந்தே சிற்றிதழ்கள் மீது பெரிதும் ஈர்ப்புண்டு. 2000 ஆம் ஆண்டு நண்ர்களோடு இணைந்து கல்லூரியில் “மழை” என்ற சிற்றிதழைக் கொண்டு வந்தோம். திருப்பூர், கோவை, ஈரோடு பகுதிக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கவிதை இதழ் அது. அச்சமயத்தில் மிகுந்த வரவேற்பினையும் நற்பெயரையும் பெற்றளித்தது. பல கல்லூரிகளின் பேராசிரியர்கள் மற்றும் படைப்பாளிகள் தொடர்பு கொண்டு தங்களது வாழ்த்தினைப் பகிர்ந்துகொண்டார்கள். அவ்வாழ்த்துக்கள் ஊக்கமும் நம்பிக்கையும் அளித்தன. மூன்று ஆண்டுகள் மழை இதழ்கள் எங்களுடைய இளங்கலைக் கல்லூரிப் பருவத்தினை இலக்கியத்தோடே பயணிக்க வைத்திருந்தது.