அந்தர் ஆத்மா தச்சனா தேவனா என்றார் நகுலன் நாம் என்றேன். பூஜ்யத்திற்கு முன்னேறுகிறவன் மறுபடியும் பூஜ்யம் அதிலிருந்து சறுக்கி வேறொ-ன்றிற்கு வருகிறேன் பிறகு மீண்டும் பூஜ்யத்திற்கு முன்னேறுகிறேன். ஆமென் முன் பின் மாற்றிப் பேசுவது மனிதர்க்கு இயல்புதான் என்பதை ஒத்துக்கொள்வதில் தொடங்குகிறது தோல்வியின் சமரசம். ஒற்றை உபாயம் கடந்து வந்த காலத்திலிருந்து ஒரே ஒரு மாற்றத்தை மேற்கொள்ள மட்டும் காலம் அனுமதிக்கிறது அது மறத்தல். நிர்கதிக்கு ஒரு கணம் முன் ஆகக் கடைசியான வார்த்தையையும் பிரயோகித்தாயிற்று என்ன…
Category: கவிதைகள்
அரூப ராத்தடத்தின் நறுமணம்
1. ராத்தடம் முழுக்க உதட்டின் ரேகைகள் அதில் செழுங்கவிதைகளின் இசைக்குறிப்புகள் அரூப வாசனைச் சுவர் முழுவதும் அவளின் உதடுசுழிப்புகள். 2. ரா எனை மீட்டுகிறது ‘என்னடா சும்மா வானத்தப் பார்த்துட்டு உட்கார்ந்திருக்க?’ என்ற கேள்விக்கான விடையை நட்சத்திரத்தைக் கேட்டுச் சொல்ல முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். 3. மேற்கண்ட ரா கவிதையைப் படித்துவிட்டு நீங்கள் நினைத்தது சரிதான் நான் ஒரு பைத்தியம் தான் கொஞ்சம் இதமாய்ச் சொன்னால் பிறழ்வன். 4. எந்த நள்ளிரவிலும் வரக்கூடும் ஒரு டிங் அதற்காகவும் உறங்காமலிருக்கிறேன்…