Skip to content

கவின்

poet kavin

Menu
  • முகப்பு
  • கவிதைகள்
  • ஹைக்கூ
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • நூல்கள்
  • பதிப்பு
  • அறிமுகம்
Menu

Author: Kavin

ஆத்மாநாமின் நினைவு நாளில் சில கவிதைகள்

Posted on July 6, 2023July 6, 2023 by Kavin

அந்தர் ஆத்மா தச்சனா தேவனா என்றார் நகுலன் நாம் என்றேன். பூஜ்யத்திற்கு முன்னேறுகிறவன் மறுபடியும் பூஜ்யம் அதிலிருந்து சறுக்கி வேறொ-ன்றிற்கு வருகிறேன் பிறகு மீண்டும் பூஜ்யத்திற்கு முன்னேறுகிறேன்.  ஆமென் முன் பின் மாற்றிப் பேசுவது மனிதர்க்கு இயல்புதான் என்பதை ஒத்துக்கொள்வதில் தொடங்குகிறது தோல்வியின் சமரசம். ஒற்றை உபாயம் கடந்து வந்த காலத்திலிருந்து ஒரே ஒரு மாற்றத்தை மேற்கொள்ள மட்டும் காலம் அனுமதிக்கிறது அது மறத்தல். நிர்கதிக்கு ஒரு கணம் முன் ஆகக் கடைசியான வார்த்தையையும் பிரயோகித்தாயிற்று என்ன…

Read more

மலைத்தேனும் கிளி ஜோசியரும்

Posted on May 21, 2023May 21, 2023 by Kavin

“இன்னும் மக்கள்” என்ற தலைப்பில் 1-5-1991-இல் புஷ்கின் இலக்கியப் பேரவை வெளியீடாக வந்த ஹைக்கூ கவிதைகளின் கூட்டுத்தொகுப்பினைத் தொகுத்தவர்கள் த.சலாவுத்தீன், பழநிபாரதி, எம்.எஸ் தியாகராஜன் ஆகியோர். மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் என்று மூன்று பிரிவுகளில் நடந்த ஹைக்கூ போட்டிகளுக்கு வந்த கவிதைகளின் தொகுப்பு. பரிசளித்த விவரங்களையும் இணைத்திருக்கிறார்கள். ஹைக்கூவைப் பொறுத்த வரையில் ஆய்வு நோக்கில் அதன் பரிணாம நிலைகளைப் பார்க்கையில் முன் வெளிவந்த அல்லது எழுதப்பட்ட ஹைக்கூக்களை உட்படுத்துவது அவசியமாகிறது. தொடக்ககால நூலான “இன்னும் மக்கள்” என்னும்…

Read more

விக்கிரவாண்டி உணவு விடுதிகள்

Posted on May 15, 2023May 15, 2023 by Kavin

தமிழ்நாட்டில் நீண்டதூரப் பேருந்துப் பயணங்களில் விக்கிரவாண்டிப் பகுதி உணவு விடுதிகள் இன்றியமையதவை. முன் எப்போதும் இல்லாத வகையில் பல மாற்றங்கள் இப்போது காணக்கிடைக்கின்றன. அதிக ஒலியும் வீண் பரபரப்புகளும் உயர்ந்த விலைப்பட்டியலும் இப்போது இல்லை. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக என்று சொல்லப்படுகின்றது. அந்த வகையில் மிக்க மகிழ்ச்சி. ஆயினும் தரமான உணவில் தான் பிரச்சனை. பயணங்களுக்கு உகந்த இட்டிலிகள் இல்லையென்றே எப்போதும் சொல்கிறார்கள். தோசை மற்றும் பரோட்டாக்கள் கிடைக்கின்றன என்றாலும் தீனிவகைகளில் தான் ஏமாற்றம். ஊருக்குள்…

Read more

நெகிழ்ச்சியின் கண்ணீர்த்துளி

Posted on May 12, 2023May 15, 2023 by Kavin

  நிகழ்காலத்தின் இயல்புகளைக் கொண்டு வாழ்வின் பெருமதியை நினைவில் கிளர்த்தும் ஒரு திரைப்படம் குட் நைட். எட்டுப் பத்து இடங்களில் நெகிழ்ச்சியோடு கைதட்டி வாய்விட்டு வெடித்துச் சிரித்து இப்படி ஒரு திரைப்படம் பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. குவாட்டர்ஸ் எனப்படும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியலை அச்சு பிசகாமல் காட்சிப்படுத்தியதும், “இந்தாங்க ட்ரெஸ்ஸுக்கு மேட்சா தேன் மிட்டாய்” என்பது போலக் குட்டிக்குட்டிப் பரவசங்கள் நிறைந்திருப்பதாகவும் ஆச்சர்யப்படுத்துகிறது. கேரளாவையும் வங்கத்தையும் சான்று காட்டிப் பேசுவதுபோல இனி மென் உணர்வு உறவுச் சிக்கல்கள்…

Read more

ஒளியிடமிருந்து ஒரு செம்புலம்பல் பக்கம்

Posted on May 8, 2023May 9, 2023 by Kavin

‘தடாகத்தில் பூத்திருந்த தாமரையைப் பறிக்க நீந்தினேன் எனது கையின் ஒவ்வொரு அசைவிற்கும் அது விலகிக்கொண்டே சென்றது என்னால் அதைப் பறிக்கவே முடியவில்லை.’ – இரவீந்திரநாத் தாகூர் நேற்றைய காலையிலிருந்து பகலில் பல முறை முயன்றும் கேட்கமுடியாமல் இருந்தது. இணையம், சூழல் முதலானவைகளால். இப்போது கேட்டேன். நன் முயற்சி. கொஞ்சம் புலம்புவோம் என்று ஸ்பாடிஃபை பக்கம் தொடங்கியிருக்கும் ஒளி முருகவேல் அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும். ஆறாம் பகுதி எழுத்தாளர் ஷாலினி பிரியதர்ஷினியுடனான சிறப்பான பகிர்வு. தாகூரைப் பற்றிய இயல்பான…

Read more

ஜப்பானிய ஹைக்கூ தமிழில் : கவின்

Posted on April 26, 2023April 26, 2023 by Kavin

ஜப்பானிய ஹைக்கூ தமிழில் : கவின் ● ஒரு மெழுகுவர்த்தியின் ஒளி இன்னொரு மெழுகுவர்த்திக்கு மாற்றப்படுகிறது வசந்தகால மாலை – அழகான கிண்ணத்தில் இந்த மலர்களை அடுக்கி வைப்போம் அரிசி இல்லை என்பதால் – குதிரைகளில் பதினோரு ஆண்கள் நிதானமாக முன்னேறுகின்றனர் காற்று மற்றும் பனிப்புயலினூடாக – பலத்த சத்தத்துடன் மழை ஆலங்கட்டிகள் விழுகின்றன என் புன்னைமரப் பயணத் தொப்பியின் மீது – குளிர்காலம் துவங்குவதற்கு முன் குழந்தைக்குச் சொல்லித் தருகிறேன் உணவுக்குச்சிகளைக் கையாள – நாம்…

Read more

சும்மாயிரு சதாசிவம்

Posted on April 26, 2023April 26, 2023 by Kavin

சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர் சத்தமும் சத்தமுடிவும் தம்முட் கொண்டோர் நித்தர் நிமலர் நிராமயர் நீள் பர முத்தர் தம் முத்திமுதல் முப்பத்தாறே. (திருமந்திரம்.125) சித்தர்கள் சிவலோகத்தில் பெறவேண்டியதை இப்பூவலகிலேயே தரிசிப்பார்கள். சத்தத்தையும் அதன் முடிவையும் தம்முள்ளேயே கொண்டவர்கள். குண்டலினி சக்தியை அசைத்தெழுப்பும் நாதமே சத்தமாகும். அதன் இறுதி நிலையான அசைவின்மை (சமாதி நிலை) சத்தத்தின் முடிவு. அம்முடிவில் ஒரு துவக்கம் உண்டு. பேரானந்தப் பாதையின் நித்தியத்துவத் துவக்கம் அது. மெய்யனுபங்களில் அறிவினைப் பயன்படுத்தாது “வெறுமனே” “சும்மாயிருத்தல்”…

Read more

பாரதியும் தமிழ் ஹைக்கூவும்

Posted on April 26, 2023April 26, 2023 by Kavin

மகாகவி பாரதியார் அவர்கள் தமிழில் முதன் முறையாக ஹைக்கூக் கவிதைகளை அறிமுகப்படுத்தி ஒரு கட்டுரை எழுதினார். அக்கட்டுரையே தமிழுக்கு ஹைக்கூக் கவிதைகளைக் கொண்டு வந்தது எனலாம். சுதேசமித்திரன் இதழில் அக்கட்டுரை 16.10.1916 அன்று வெளியானது. ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் சிலவற்றின் மொழிபெயர்ப்புகளைக் கொண்டிருந்த அக்கட்டுரை மகாகவி பாரதியார் அவர்கள் ஹைக்கூக் கவிதைகளைப் பற்றிக் கொண்டிருந்த சிந்தனைகளை எடுத்தியம்பியது. அக்கட்டுரையை வாசித்த எழுத்தாளர்களும், பொது மக்களும் ஹைக்கூக் கவிதைகளின் மீது தங்களின் கவனத்தைத் திருப்பினர். ஒரு புதியவகைக் கவிதை…

Read more

அரூப ராத்தடத்தின் நறுமணம்

Posted on April 25, 2023April 26, 2023 by Kavin

  1. ராத்தடம் முழுக்க உதட்டின் ரேகைகள் அதில் செழுங்கவிதைகளின் இசைக்குறிப்புகள் அரூப வாசனைச் சுவர் முழுவதும் அவளின் உதடுசுழிப்புகள். 2. ரா எனை மீட்டுகிறது ‘என்னடா சும்மா வானத்தப் பார்த்துட்டு உட்கார்ந்திருக்க?’ என்ற கேள்விக்கான விடையை நட்சத்திரத்தைக் கேட்டுச் சொல்ல முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். 3. மேற்கண்ட ரா கவிதையைப் படித்துவிட்டு நீங்கள் நினைத்தது சரிதான் நான் ஒரு பைத்தியம் தான் கொஞ்சம் இதமாய்ச் சொன்னால் பிறழ்வன். 4. எந்த நள்ளிரவிலும் வரக்கூடும் ஒரு டிங் அதற்காகவும் உறங்காமலிருக்கிறேன்…

Read more

நான் புதுமைப்பித்தன் நாடகம்

Posted on March 30, 2023March 30, 2023 by Kavin

தனது இறுதிக்காலத்தில் நடுங்கிக்கொண்டே எழுதிய மகத்தான எழுத்தாளர் ஒருவரின் கரம்பிடித்துப் பார்த்தேன்  இன்று. எழுத்தை அதிதீவிரமாக நம்பியிருந்தவன் ஒருவனின் ஆன்மாவைத் தரிசிக்க நேர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். காலத்தைப் பின்னோக்கி நகர்த்தி எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் செம்பிரதி “நான் புதுமைப்பித்தன்” நாடகம். எஸ்.ராமகிருஷ்ணன் கதை வசனத்தில் கருணா பிரசாத் இயக்கத்தில் நான் புதுமைப்பித்தன் நாடகம் கூத்துப்பட்டறை முத்துசாமி அரங்கில் நடைபெற்றது. அவரின் அந்த உறுதி வெளிப்பட்ட விதம், இயலாமை இருப்பினும் சமரசங்களுக்கு ஆட்படாமல் தனக்கான…

Read more

இத்தளம் பற்றி

கவின்

வழிப்போக்கனின் தேநீர் இடைவேளையில் கோப்பையைக் கையில் வருடிப்பற்றிக்கொண்டு பகிரப்படும் சின்னஞ்சிறிய உரையாடல்கள் இவை. வெறுமையும், உன்மத்தமும், சமநிலையும் அக்கணம் பொழிகின்ற பூவுதிரல். எழுத்தின்வழி சிறிதேனும் உணரத்தலைப்படும் காலம் மற்றும் காலமற்ற நினைவாடல் பரவசம்.

www.poetkavin.com

தேடுதலுக்கு

அண்மைப் பதிவுகள்

  • ஆத்மாநாமின் நினைவு நாளில் சில கவிதைகள்
  • மலைத்தேனும் கிளி ஜோசியரும்
  • விக்கிரவாண்டி உணவு விடுதிகள்
  • நெகிழ்ச்சியின் கண்ணீர்த்துளி
  • ஒளியிடமிருந்து ஒரு செம்புலம்பல் பக்கம்

கால வரிசை

  • July 2023
  • May 2023
  • April 2023
  • March 2023

ஆசிரியரைத் தொடர்புக்கொள்ள :

poetkavin@gamil.com
+91 99420 50065

நூல்கள் பெற

இடையன் இடைச்சி நூலகம்
அரச்சலூர்,
ஈரோடு - 638101
Online Book Store :
www.tamilhaiku.com
Contact Number :
9841208152

Categories

  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • பத்தி எழுத்து
  • ஹைக்கூ
© 2023 கவின் | Powered by Superbs Personal Blog theme